திருப்பதிக்குச் சென்று திருமலையில் உள்ள கல்யாண கட்டாவில் (இலவச அன்னதானம் அளிக்கும் இடத்திற்கு எதிரே) தான் மொட்டையடிக்க வேண்டும். அதன் பின்னர் திருமலையில் உள்ள புஷ்கரணி குளத்தில் தான் குளிக்க வேண்டும். தங்கும் இடத்தில் குளிக்கக் கூடாது.
திருமலையில் பூக்கும் மலர்கள் யாவும் ஏழுமலையானுக்கே உரியது என்பதால் பெண்கள் திருமலையில் சாமி தரிசனத்திற்கு முன்னரும் பின்னரும் திருமலையில் தங்கியிருக்கும் சமயம் தலையில் பூச்சூடக் கூடாது என்பது ஐதீகம்.
திருப்பதி பெருமாள் கோவிலாக இருந்தாலும் அது அம்மன் அம்சம் உள்ள ஒரே வைணவக் கோவிலாக இருப்பதால் விமானத்தின் நான்கு புறங்களிலும் சிம்ம வாகனம் இருக்கும் வேறு எந்த பெருமாள் கோவிலிரும் இம்மாதிரி இருக்காது. எனவே சிம்ம வாகனத்தை வழிபட வேண்டும் அதன் பின்;னர் சாமியை பார்க்கும் முன்னர் நாம் எப்போதாவது தான் பெருமாளை பார்க்கும் பாக்கியம் பெறுகின்றோம் ஆனால் கருடனோ எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பதால் அவருக்கு வழிபாடு செய்து அதன் பின்னர் ஏழுமலையனை வழிபட வேண்டும்.
அதன் பின் வெளியே வந்தவுடன் பெருமாளின் வளர்ப்புத் தாயாரை மடப்பள்ளியில் பார்த்து வழிபட வேண்டும். அதன் பின்னர் சுற்றிவரும் சமயம் கோபுர சீனிவாசப் பெருமாளை தரிசித்து நமது வேண்டுதல்கள் அனைத்தையும் கூறி வழிபட வேண்டும்.
பின்னர் காணிக்கைகளை உண்டியலில் சேர்த்து வழிபட வேண்டும் உண்டியில் காணிக்கை செலுத்தி முடிந்த பின்னர் உண்டியலுக்கு எதிரே உள்ள மேடைக்கு மேல் உள்ள யோக நரசிம்மரை வழிபட்டு சுற்றுப்பிரகாரத்தில் ஈசான்ய மூலையில் உள்ள ஒரு தூண் (திருமலை கோயிலுக்கு அஸ்திவாரம் போட்ட இடம்) கண்டுபிடித்து குறைந்தது 9 முதல் 21 சுற்று வரை சுற்றி வழிபாடு செய்வதன் மூலம் வீட்டிலுள்ள வாஸ்து குறைபாடுகள் எதுவாக இருந்தாலும் நீங்கி 48 நாட்களுக்குள் சுப பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்